/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி
/
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி
ADDED : ஆக 20, 2025 01:26 AM
கிருஷ்ணகிரி, வருவாய் மாவட்ட அளவி லான, 2 நாள் தடகள போட்டியில், 1,600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வரு வாய் மாவட்ட அளவிலான, 2 நாள் தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. கலெக்டர் தினேஷ் குமார், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், 10 குறு வட்டங்களில், முதல் மற்றும் 2ம் இடம் பிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு, 14, 17 மற்றும் 19 வயதுப்பிரிவில், 100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., 800 மீ., 1,500 மீ., 3,000 மீ., 5,000 மீ., ஓட்ட போட்டிகளும், 80 மீ., 110 மீ., 400 மீ., தடை தாண்டும் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலுான்றி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டப் போட்டிகள் என மொத்தம், 103 தடகளப்போட்டிகள் நடத் தப்படுகிறது. இதில் முதல் மற்றும் 2ம் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இதில், சி.இ.ஓ., (பொ) முனிராஜ், டி.இ.ஓ.,க்கள் மோகன், கோபாலப்பா, உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், நகர் மன்ற தலைவர் பரிதா நவாப், உடற்கல்வி ஆய்வாளர் வளர் மதி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

