/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 04, 2025 08:32 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க, மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் வேலை அறிக்கை வாசித்தார். இதில், 38 மாவட்டங்களில் இருந்து வருவாய் துறை அலுவலர்கள், மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், மாநில தலைவர் முருகையன், நிருபர்களிடம் கூறியதாவது:
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் வாரத்திற்கு, 6 நடத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. முகாம் எண்ணிக்கை குறைக்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நிரப்பாமல், 3 ஆண்டுகளாக காலதாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக, வரும், 7ல் அரசின் தலைமை செயலாளரை சந்தித்து, கோரிக்கை குறித்து தெரிவிப்பது. 2வது, தமிழகத்திலுள்ள, 16,000 அலுவலர்கள் வரும், 16 மாலை, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.அன்றே வருவாய் துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவது. 3வது, செப்., 3, 4ல், 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.