ADDED : ஜூலை 01, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, எஸ்.பி.எம்., காலனி, சாந்தி நகர், அலசநத்தம், விகாஸ் நகர், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய, 7 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் அலசநத்தம், ஆவலப்பள்ளியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிக்கு, கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் நேற்று துவக்கி வைத்தார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, காங்., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், நிர்வாகிகள் மைஜா அக்பர், சூர்யகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.