/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
/
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
ADDED : மே 02, 2025 01:16 AM
ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கரியசந்திரத்தை சேர்ந்தவர் ஜனப்பரெட்டி மகன் சுப்பராயுடு, 16. அதே பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 17. இருவரும் நேற்று முன்தினம் காலை, 7:15 மணிக்கு, பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் பேரிகை - முதுகுறுக்கி சாலையில் சென்றனர். பிரவீன்குமார் பைக்கை ஓட்டினார். சூளகுண்டா அருகே சாலை குறுக்கே வந்த மொபட் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்தபோது, இருவரும் தவறி கீழே விழுந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுப்பராயுடு
உயிரிழந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.*உத்தனப்பள்ளி அருகே பீர்ஜேப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 44. கூலித்தொழிலாளி; கடந்த, 28 மதியம், 2:30 மணிக்கு, உத்தனப்பள்ளி - ஓசூர் சாலையில், டி.வி.எஸ்., ஜூப்பிட்டர் மொபட்டில் சென்றார். துப்புகானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, மொபட்டுடன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
*சூளகிரி அருகே கோபசந்திரத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி, 40. விவசாயி; இவரது மனைவி ரத்தினம்மா, 35. இருவரும் முகுலப்பள்ளியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றனர். அத்திமுகத்தில் உள்ள பேரண்டப்பள்ளி பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, மோதியதில், கணவர் கண்முன்னே ரத்தினம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வெங்கடசாமி, ஓசூர் தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ராசுகுட்டி. இவரது மனைவி திவ்யா, 25. நேற்று முன்தினம் ராசுகுட்டியும், திவ்யாவும் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், பாம்பாறு அருகே ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த திவ்யா பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையை சேர்ந்தவர் சஞ்சய், 17. இவர், கடந்த 29ல், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் சஞ்சய் பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.