/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மோசமான நிலையில் சாலை: பொதுமக்கள் கடும் அவதி
/
மோசமான நிலையில் சாலை: பொதுமக்கள் கடும் அவதி
ADDED : ஜன 01, 2025 01:23 AM
கரூர், ஜன. 1-
கிருஷ்ணராயபுரம் அருகில், வளையல்காரன்புதுாரில் செல்லும் சாலை பள்ளம், மேடாக உள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய
த்திற்குட்பட்ட, ரெங்கநாதபுரம் பஞ்., வளையல்காரன்புதுாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஆர்.புதுக்கோட்டை அருகில் வளையல்காரன்புதுாருக்கு சாலை செல்கிறது. இங்கு தார் சாலை போடப்பட்டு பல ஆண்டு
களுக்கு மேல் ஆகிறது. இதனால், சாலை சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. பல கிலோ மீட்டர் துாரம் வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கரடு, முரடான சாலையை கடந்து செல்லும்போது, வாகனங்கள் பழுதடைவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மழை பெய்யும்போது, சேதமடைந்த சாலையில் மழை நீர் தேங்கி பள்ளம் எது, மேடு எது என்று தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்ல சர்க்கஸ் சாகஸம் செய்ய வேண்டி உள்ளது. அவசர தேவைகளுக்கு கூட, அந்த சாலையின் வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

