/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5.92 கோடியில் சாலை பணி துவக்கம்
/
ரூ.5.92 கோடியில் சாலை பணி துவக்கம்
ADDED : டிச 22, 2025 08:23 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஐ.டி., பார்க் வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மூலம், 3.37 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
அதேபோல், தேவிசெட்டிப்பள்ளி முதல் மாவத்துார் வரை, 49.10 லட்சம் ரூபாயிலும், பேகேப்பள்ளி முதல் பாகூர் வரை, 49.80 லட்சம் ரூபாயிலும், பாகூர் முதல் கர்நாடக எல்லை வரை, 47.90 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தும்மனப்பள்ளி முதல் படுதேப்பள்ளி வரை, 49.80 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பெரிய எலசகிரி முதல் பேடரப்பள்ளி வரை, 49.76 லட்சம் ரூபாய் மதிப்பிலும் தார்ச்சாலை பணி நடக்க உள்ளது. மேலும், இனப்பசந்திரம் கிராமத்தில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணி ஆகியவை, ஒன்றிய பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிகளை, எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் வீரபத்திரப்பா, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

