/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலைப்பணியாளர் தொடர் முழக்க போராட்டம்
/
சாலைப்பணியாளர் தொடர் முழக்க போராட்டம்
ADDED : ஏப் 25, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் முழக்க போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திம்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாநில தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் மகாதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பொதுச்செயலாளர் அம்சராஜ் ஆகியோர் பேசினர். பொருளாளர் சுபாஷ் சந்திரபோஷ் நன்றி கூறினார்.
போராட்டத்தில், முறையாக முதுநிலை பட்டியல் வெளியிட்டு சாலை ஆய்வாளர் நிலை - 2 பதவி உயர்வு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்கள் பொது சேமநல நிதி கணக்கில், முன்பணம் கோரி விண்ணப்பம் செய்பவர்களிடம், 500 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதை கண்டிப்பதோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரியகால இடைவெளியில் முன்பணம் பெற்றுத்தர வேண்டும். சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கருவி, தளவாடங்கள், மண்வெட்டி, கடப்பாறை, கை ரம்பம், கை அருவாள், மின்சார வண்டி, காலணி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

