/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குணம்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டலில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்
/
'குணம்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டலில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்
'குணம்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டலில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்
'குணம்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டலில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்
ADDED : செப் 09, 2025 01:56 AM
ஓசூர் :ஓசூர், 'குணம்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக, ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் மற்றும் குடல் தொடர்பான நோய்களை கண்டறிய அட்வான்ஸ் கேஸ்ட்ரோ கேர் யூனிட், மேம்படுத்தப்பட்ட எண்டோஸ்கோபி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிரதீப்குமார், டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகளை, மூத்த டாக்டர்கள் சண்முகவேலு, கண்ணப்பன், சீனிவாச கவுடா, சிவப்பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
டாக்டர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ''வயிறு, கழுத்து, நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ரோபோடிக் கருவி பயன்படுகிறது. இதன் மூலம், 360 டிகிரி சுழல முடியும். வயிற்றுக்கு பின் பகுதியில் உள்ள கட்டிகள் மற்றும் ரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை மிக துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால் நோயாளிக்கு எவ்வித பக்க விளைவு மற்றும் பெரிய வலி இருக்காது. 24 மணி நேர, நானோ மெட்ரி எனப்படும் சிகிச்சை வாயிலாக, குடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதில் கண்டறிந்து, அதை மருந்துகளில் குணப்படுத்துவதா அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்வதா என்பதை டாக்டர்கள் முடிவு செய்ய உதவியாக இருக்கும்,'' என்றார்.
டாக்டர்கள் கவிதா, வனிதா, கார்த்திக் பாண்டியன், பிரபு, மருத்துவமனை மனித வளப்பிரிவு அலுவலர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.