நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியிலிருந்த, 7 'சிசி-டிவி' கேமராக்களை கடந்த, 11ல் மர்ம நபர்கள் உடைத்தனர். புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பழையபேட்டை ரவுடி மணிமாறனை நேற்று கைது செய்தனர். அவர் கடந்த, 26 காலை, நரசிம்ம சுவாமி கோவில் அருகில், தி.மு.க., பிரமுகரின் டிரைவர் சையத் நுார், 44, காரில் சென்றபோது, அக்காரை வழி
மறித்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதும், டிரைவர் சையத் நுாரை மிரட்டி
அவரிடமிருந்து, 4.5 பவுன் செயின், 10,000 ரூபாயை பறித்ததும் தெரிய வந்தது.

