/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
/
ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : நவ 04, 2025 02:11 AM
பாகலுார், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே கூலிகானப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58, விவசாயி; ஊரில் புதிய வீடு கட்டி வருகிறார்; அதற்காக பாகலுாரில் உள்ள இந்தியன் வங்கியில், தன் கணக்கில் இருந்த பணத்தை நேற்று மதியம் எடுத்து கொண்டு, டி.வி.எஸ்., ஜூப்பிட்டர்
ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் பணத்தை வைத்திருந்தார். அவரை இருவர் பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். பாகலுாரிலுள்ள பர்னிச்சர் கடை முன், தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, ஸ்கூட்டர் சீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அதற்குள் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. பாகலுார் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை பார்த்த போது, மர்ம நபர்கள் இருவர் பணத்தை திருடி சென்றது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

