/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் ரூ.2.40 லட்சம் உண்டியல் வசூல்
/
சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் ரூ.2.40 லட்சம் உண்டியல் வசூல்
சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் ரூ.2.40 லட்சம் உண்டியல் வசூல்
சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் ரூ.2.40 லட்சம் உண்டியல் வசூல்
ADDED : நவ 21, 2024 01:45 AM
கபாலீஸ்வரர் கோயில் ரூ. 20 லட்சம் உண்டியல் வசூல்
கிருஷ்ணகிரி, நவ. 21-கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் அமைந்துள்ள பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 6 மாதங்களாக பல்வேறு விழாக்கள் மற்றும் வழிபாடுகள் நடந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று இக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் எண்ணப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி மற்றும் சத்தியா ஆகியோர் தலைமையில், செயல் அலுவலர் சித்ரா மேற்பார்வையில், உண்டியல் காணிக்கைகளை பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணினர். இதில், 2.40 லட்சம் ரூபாய், 17 கிராம் வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.