/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் நேரு தகவல்
/
கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் நேரு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் நேரு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் நேரு தகவல்
ADDED : டிச 22, 2024 12:59 AM
கிருஷ்ணகிரி, டிச. 22-
''கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த, 3 ஆண்டுகளில், 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிருஷ்ணகிரி நகராட்சியில், 49.86 கோடி ரூபாய் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை மற்றும் முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா மற்றும் துவங்கப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், காங்., - எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி திட்டங்களை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் நேரு பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக, ஓசூர் மாநகராட்சிக்கு, 772.17 கோடி ரூபாய், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு, 95.03 கோடி, டவுன் பஞ்., என உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1,000 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். வரும் ஆண்டுகளில் மேலும், 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 2- கட்டமாக, 7,955.37 கோடி மதிப்பில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், 38.82 லட்சம் பேர் பயன்பெறுவர். இவ்வாறு, அவர் பேசினார்.