/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் மாணவ, மாணவியருக்கு ரூ.3.65 கோடி கல்விக்கடன்
/
ஓசூரில் மாணவ, மாணவியருக்கு ரூ.3.65 கோடி கல்விக்கடன்
ஓசூரில் மாணவ, மாணவியருக்கு ரூ.3.65 கோடி கல்விக்கடன்
ஓசூரில் மாணவ, மாணவியருக்கு ரூ.3.65 கோடி கல்விக்கடன்
ADDED : நவ 27, 2025 01:51 AM
ஓசூர், நஓசூர், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சார்பில், மாணவ, மாணவியருக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, கல்லுாரி மாணவ, மாணவியர், 37 பேருக்கு, 3.65 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக்கடனை வழங்கினர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் கடந்த மாதம், 1ம் தேதி முதல் கடந்த, 20ம் தேதி வரை, 92 பயனாளிகளுக்கு, 8.30 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
சிபில் ஸ்கோர் குறைவாக உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெற வித்யா லட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டிருந்தாலும், கல்விக்கடன் பெற, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தாரை, 94431 36918 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், கல்விக்கடன் ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இதுவரை கல்விக்கடன் பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட, 40 பேரின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, மறுபடியும் விண்ணப்பிக்க வைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, இந்தியன் வங்கி முன்னோடி மேலாளர் (பொறுப்பு) வெங்கடேசன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்த் ரெட்டி, கண்காணிப்பாளர் கிரீஷ் ஓங்கல் உட்பட பலர் பங்கேற்றனர்.

