/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரூ.4 லட்சம் பறிமுதல்
/
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரூ.4 லட்சம் பறிமுதல்
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரூ.4 லட்சம் பறிமுதல்
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரூ.4 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 15, 2024 01:08 AM
கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரூ.4 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி, டிச. 15-
ஊத்தங்கரை அருகே, காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களுடன், நான்கு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பநாயக்கனுார் பிரிவு சாலையில், நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே சந்தேகத்திற்குகிடமாக வந்த மாருதி பிரீசா காரை நிறுத்தி சோதனையிட்டதில், 6,000 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தது ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தை சேர்ந்த நீலேஷ்குமார், 33, என தெரிந்தது. அவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனையில் ஈடுபட்டதும், மீண்டும் புகையிலை பொருட்கள் வாங்க பெங்களூருக்கு சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகையிலை பொருட்கள், குட்கா விற்பனை செய்த தொகையான, நான்கு லட்சம் ரூபாய் மற்றும் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், மொபைல் போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். நீலேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரது தந்தையான ஆனந்தராலை தேடி வருகின்றனர்.