/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் ரூ.42 ஆயிரம் திருட்டு
/
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் ரூ.42 ஆயிரம் திருட்டு
ADDED : பிப் 08, 2025 06:49 AM
தொப்பூர்: -சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதுார் கூட்ரோடு பகுதியில் மணி, 52, என்பவர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த பணம் திருட்டு போனது
தெரியவந்தது. இது குறித்து தொப்பூர் போலீசில் மணி புகார் அளித்தார். அங்கு வந்த போலீசார் கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவு-களை ஆய்வு செய்தனர். அதில்,
நள்ளிரவு, 1:00 மணிக்கு டிப்டாப்-பாக வந்த வாலிபர் ஒருவர், கடை பின்புறம் முதல் தளத்தில்
உள்ள,கண்ணாடி கதவுகளின் வழியாக, கடைக்குள் நுழைந்து கல்-லாவில் இருந்த, 42 ஆயிரம் ரூபாய், 5,000
ரூபாய் மதிப்புள்ள சிகரெட், சென்ட், பிஸ்கட் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய-வந்தது.