/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2025 01:53 AM
தர்மபுரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன், பேரூராட்சி பணியாளர் சங்க தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை மாநில பொருளாளர் ராஜேந்திரன், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணை தலைவர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணிக்கொடை பட்டுவாடா சட்டப்படி தற்காலிக பணி புரியும் அனைவருக்கும் பணிக்கொடை சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடத்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சதீஸை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.