/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை
/
ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை
ADDED : அக் 01, 2025 01:55 AM
கிருஷ்ணகிரி:இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பூஜை பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.
இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், நாளை விஜயதசமியும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு மாதமாக மண்டிகளில் பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு மூட்டை பொரி, 450 ரூபாய், ஒருபடி பொரி, 12 ரூபாய் என விற்கப்படுகிறது. அதே போல், வாழை மரம், சாம்பல் பூசணி, பழங்கள், வண்ணத்தோரணங்கள் மற்றும் பூக்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். ஒரு ஜோடி பெரிய வாழை மரம், 500 ரூபாய்க்கும், வாகனத்தில் கட்டும் சிறிய வாழை மரம் ஒரு ஜோடி, 30 முதல், 50 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர்.
சம்பல் பூசணி கடந்த ஆண்டு ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்தாண்டு மழையால் சாகுபடி குறைந்து ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது. நேற்று சாமந்திப்பூ ஒரு கிலோ, 150 ரூபாய், குண்டு மல்லி ஒரு கிலோ, 600 ரூபாய் என விற்பனையானது. கடந்தாண்டு ஒரு தார் வாழைப்பழம், 800 ரூபாய் வரை விற்ற நிலையில், இந்தாண்டு ஒரு தார், 650 ரூபாய் என விற்பனையானது. நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வண்ணம் அடிக்கும் பணிகள் நடந்ததால், இன்று பூஜை பொருட்கள் அதிகம் விற்பனை ஆகும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.