/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம்--சென்னை விமான கட்டணம் உயர்வு
/
சேலம்--சென்னை விமான கட்டணம் உயர்வு
ADDED : ஜூன் 03, 2025 01:47 AM
ஓமலுார், தமிழகம் முழுவதும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. சொந்த ஊருக்கு விமானங்களில் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உடான் திட்டத்தில், பயணிகள் விமானங்கள் இயக்கப்
படுகின்றன. உடான் அல்லாத திட்டத்தில், சேலம் - சென்னை பயணிகள் விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. கோடை விடுமுறைக்கு பின், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்வோர், விமானத்தில் செல்ல முன்பதிவு
செய்தனர்.
வழக்கமாக சேலம் - சென்னைக்கு, 4,000 முதல் 4,500 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. நேற்று மட்டும், 6,700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், மதுரை - சென்னை, திருச்சி - சென்னை, துாத்துக்குடி - சென்னை ஆகிய பகுதிகளுக்கு, வழக்கமான கட்டணத்தை விட, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.