தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி


ADDED : நவ 20, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கடஹர சதுர்த்தி

கிருஷ்ணகிரி, நவ. 20-

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை, சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தன. பக்தர்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு

அருள் பாலித்தார்.

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என, பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us