/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
சரஸ்வதி வித்யாலயா பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
சரஸ்வதி வித்யாலயா பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப் பள்ளியிலுள்ள, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
இதில், மாணவி கிருத்திகா, 500க்கு, 473 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ஹர்ஷினி, 462, அல்பியா பாத்திமா, 460, ரஞ்சிதா, 460 என, முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், 10ம் வகுப்பு தேர்வில், மாணவர் ராம்லிங்கேஷ், 500க்கு, 482, ஆஷிகா, 482 மதிப்பெண்களை பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
இந்த மாணவ, மாணவியரை,
ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் அன்பரசன், தாளாளர் சங்கீதா அன்பரசன், மேலாளர் பூபேஷ் மற்றும் பள்ளி முதல்வர் ஷர்மிளா ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.