/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமூக பொறுப்பு நிதி ரூ.78.72 லட்சத்தில் கட்டிய பள்ளி, பி.ஹெச்., கட்டடங்கள்

ADDED : ஏப் 13, 2025 04:38 AM
கிருஷ்ணகிரி: சமூக பொறுப்பு நிதியில், 78.72 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளி கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு துறை பயன்பாட்டிற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதா-வது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் பெருந்தொழில் நிறு-வனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி போச்சம்
பள்ளியில், 14.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு பதிவிற்கான அலுவலக கட்டடம், மத்துார், அரசம்பட்டி, ஆனந்துார் அரசு பள்ளிகளுக்கு, 37.65 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள், கழிவறைகள், ஊத்தங்கரையில், 23.80 லட்சம் ரூபாய் மதிப்பில் விளையாட்டு மைதானம், 2.44 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் என மொத்தம், 78.72 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் முடிந்துள்ளன. துறை சார்ந்த அலுவலர்கள் கட்டடங்கள், விளையாட்டு மைதானத்தை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜ-கோபால், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.