/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

ADDED : செப் 09, 2025 01:55 AM
கிருஷ்ணகிரி, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 1,211 பேர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட விளையாட்டு போட்டிகள், 12வது நாளாக நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், நேற்றைய போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், சதுரங்க போட்டியில், பள்ளி மாணவியர், 310 பேர், கல்லுாரி மாணவியர், 187 பேர், அரசு ஊழியர்கள், 98 பேர் என, மொத்தம், 595 பேர் பங்கேற்றனர். பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில், 384 மாணவர்கள், தடகள போட்டியில், 232 மாணவியர் என மொத்தம், 1,211 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டிகள் கடந்த மாதம், 26ல் துவங்கி வரும், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தனிநபர் போட்டிகளில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.