ADDED : ஆக 30, 2026 02:59 AM
பென்னாகரம்: பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்ட-மைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார்.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்-டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. குழுவில் கடந்த, 2 ஆண்டு-களில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. பள்-ளியின் தரம் மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி முன்-னேற்றம், பள்ளி மற்றும் சமுதாயம் இணைப்பு, பள்ளி வசதிகள் மேம்பாடு உள்ளிட்டவைகள் பற்றி பெற்றோர்களுடன் கலந்துரை-யாடல் நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பெற்றோர், குழந்தை-களின் கல்வி வளர்ச்சி, பள்ளி வளர்ச்சி சார்ந்து கருத்து தெரிவித்-தனர்.
