/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்': ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

ADDED : ஆக 28, 2024 07:34 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும், மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறாத கடைகளுக்கு கடந்த, 2 மாதங்களுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம், 'சீல்' வைக்கும் பணியை துவங்கியது. அதனால், தொழில் உரிமம் பெற வியாபாரிகள் விண்ணப்பித்தனர்.
மாநகராட்சி பகுதிகளில் மொத்தம், 10,000க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளதாக கணக்கிடப்பட்ட நிலையில், 3,000 பேர் மட்டுமே தொழில் உரிமம் பெற்றனர். மீதுள்ள, 7,000 பேர் தொழில் உரிமம் பெறவில்லை.
அதனால், நேற்று முதல், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் துவங்கினர். நேற்று ஒரே நாளில், 5 கடைகள், ஓட்டல்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன. 'சீல்' நடவடிக்கையை தவிர்க்க, உடனடியாக வியாபாரிகள் தொழில் உரிமம் பெற, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.