தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விதை உரக்கட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு

விதை உரக்கட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு

விதை உரக்கட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு


ADDED : நவ 20, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் வட்டம், சென்னத்துார் கிராமத்தில் அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில், கிராம விவசாயிகளுக்கு விதை உரக்கட்டு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தினர்.

விதை உரக்கட்டின் முக்கியத்துவம், அதன் தயாரிப்பிற்கு தேவையான பொருட்கள், தயாரிக்கும் முறை மற்றும் வயலில் பயன்படுத்தும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விதை மற்றும் உரங்களை ஒருங்கிணைத்து உரக்கட்டு தயாரிக்கும் செயல்முறை விளக்கப்பட்டது. உரக்கட்டின் அமைப்பு, விதையுடன் உரம் இணைந்து செயல்படும் விதம் மற்றும் விதைப்பிற்கு பிந்தைய ஆரம்ப வளர்ச்சியில் ஊட்டச்சத்துக்களின் பங்கு ஆகியவை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.நிகழ்ச்சியில், கிராம விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, விதை உரக்கட்டு தயாரித்தல், அதன் பயன்பாடு மற்றும் பயிர் வளர்ச்சியில் அதன் பங்கு குறித்து, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us