/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விளையாட்டு விடுதி சேர்க்கைமாணவர்களுக்கு தேர்வுப் போட்டி
/
விளையாட்டு விடுதி சேர்க்கைமாணவர்களுக்கு தேர்வுப் போட்டி
விளையாட்டு விடுதி சேர்க்கைமாணவர்களுக்கு தேர்வுப் போட்டி
விளையாட்டு விடுதி சேர்க்கைமாணவர்களுக்கு தேர்வுப் போட்டி
ADDED : மே 08, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி,:தமிழகம் முழுவதும் விளையாட்டு விடுதிகளில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான தேர்வுப் போட்டி நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாணவர்களுக்கான தேர்வுப் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் துவக்கி வைத்தார். இத்தேர்வில் மாவட்டம் முழுவதும் இருந்து, 102 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, வாலிபால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிக்கு, 600 மீ., 800 மீ., ஓட்டம், நீளம் தாண்டு தல், 30 மீ., வேகத்திறன் ஓட்டம், மெடிசன்பால் ஓவர் ஹெட் த்ரோ, ஷட்டில் ரன், நின்ற நிலையில் இருந்து நீளம் தாண்டுதல், நின்ற நிலையில் இருந்து உயரம் தொடுதல்
உள்ளிட்ட உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்து, அதில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டு, வரும், 19 முதல், 24 வரை நடக்கும் மாநில அளவிலான உடற்தகுதி தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் தேர்வாகும் மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற உள்ளனர். இன்று மாணவியருக்கான உடற் தகுதித் தேர்வுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

