/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 12, 2024 06:39 AM
ஓசூர்: ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை சார்பில், 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.
கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் சிவராமன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்து பேசும்போது, மாணவர்களிடையே கணினியின் அவசியம், தற்காலத்தில் கணினி பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். நைஜீரியாவின் ஸ்கை லைன் யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருந்த அசோக்குமார், தற்கால மாணவர்களின் கல்வி திறனையும், கணினி அறிவியல் துறையில் மாணவர்கள் ஆளுமை திறனை மேலும் வளர்த்து கொள்ள அறிவுறுத்தினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத், மாணவ, மாணவியரை கவரும் வகையில் பேசினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதி கல்லுாரிகளில் இருந்து, 450 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

