/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் சிறு, குறு தொழில் தொடர்பான கருத்தரங்கம்
/
ஓசூரில் சிறு, குறு தொழில் தொடர்பான கருத்தரங்கம்
ADDED : ஜன 13, 2024 03:42 AM
ஓசூர்: ஓசூர் இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பல்வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்தும் வகையிலான கருத்தரங்கம் நடந்தது.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார்.
அப்போது, தமிழக முதல்வரின் லட்சிய இலக்கான, 2030ம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் தொழில்களை நிறுவ ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு, நிதி நிபந்தனைகளுடன் கூடிய நிதி உதவி வழங்கப்படும் என, உறுதியளித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மார்க்கெட்டிங் மேலாளர் மோகன், அத்துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மண்டல மேலாளர் ராஜூ நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஓசூர் கிளை மேலாளர் நாகராஜன் செய்தார்.