/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தீபாவளியில் அரசு பஸ்களுக்கு தனி கவுன்ட்டர்
/
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தீபாவளியில் அரசு பஸ்களுக்கு தனி கவுன்ட்டர்
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தீபாவளியில் அரசு பஸ்களுக்கு தனி கவுன்ட்டர்
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் தீபாவளியில் அரசு பஸ்களுக்கு தனி கவுன்ட்டர்
ADDED : அக் 27, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில்
தீபாவளியில் அரசு பஸ்களுக்கு தனி கவுன்ட்டர்
கிருஷ்ணகிரி, அக். 27-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும், 31 முதல் நவ., 3 வரை, 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதால், ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கூடுதலாக வரும் வாகனங்களை ஒழுங்கு படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூடுதல் அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அரசு பஸ்கள் சிரமமின்றி சுங்கச்சாவடியை கடந்து செல்ல, தனியாக கவுன்ட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், டி.எஸ்.பி.,க்கள் முரளி, சீனிவாசன், முத்துகிருஷ்ணன், ஆனந்தராஜ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.