/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல குழுக்களாக யானைகள் முகாம் விவசாய பயிர்கள் தொடர் சேதம்
/
பல குழுக்களாக யானைகள் முகாம் விவசாய பயிர்கள் தொடர் சேதம்
பல குழுக்களாக யானைகள் முகாம் விவசாய பயிர்கள் தொடர் சேதம்
பல குழுக்களாக யானைகள் முகாம் விவசாய பயிர்கள் தொடர் சேதம்
ADDED : ஜன 13, 2025 02:39 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வனப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்-டுள்ளன. இதில், 2 யானைகள் நேற்று முன்தினம் இரவு நொகனுார் அருகே, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. அதனால் வாகன போக்குவரத்து, அவ்வழியாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இதில், 6க்கும் மேற்பட்ட யானைகள், இரவில் தேன்கனிக்-கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் வனப்பகு-திக்கு செல்வதும், பகலில் திரும்பி வருவதுமாக உள்ளன. ஊடே-துர்க்கம் வனப்பகுதியில் தனியாக உள்ள ஒற்றை யானை, உப்பு-பள்ளம் கிராமம் வழியாக நேற்று சுற்றித்திரிந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 8 யானைகளும், போடூர்பள்ளம் வனப்பகுதியில், 8 யானைகளும் முகாமிட்டுள்-ளன. இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங் களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரு-கின்றன. இதனால்,
கர்நாடகா மாநிலத்திற்கு யானைகளை விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.