/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் ஆறாக கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் ஆறாக கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 30, 2025 05:50 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலை சந்திப்பில் பண்டாஞ்சநேயர் கோவில் உள்ளது. இதன் அருகே, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில், சர்வீஸ் சாலையில், நேற்று மாலை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கனரக வாகனங்கள் சென்ற போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மீது, கழிவு நீர் தெரித்து விழுந்தது.
இதுபோல் அடிக்கடி சாலையில் கழிவுநீர் செல்வது வாடிக்கையாக உள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மேற்கொண்டு செல்ல வழியின்றி சாலைக்கு வருகிறது. அதை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் என, யாரும் கண்டுகொள்வதில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

