/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
7 ஆண்டாக மூன்று சக்கர வண்டிக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி
/
7 ஆண்டாக மூன்று சக்கர வண்டிக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி
7 ஆண்டாக மூன்று சக்கர வண்டிக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி
7 ஆண்டாக மூன்று சக்கர வண்டிக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி
ADDED : டிச 30, 2025 05:43 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொட்டபள்ளனுாரை சேர்ந்தவர் மார்கண்டன், 52, லாரி டிரைவர். இவருக்கும் திப்பம்பட்டியை சேர்ந்த மங்கா என்பவருக்கும் கடந்த, 1996ல் திருமணமானது. மார்கண்டனின் குடிப்பழக்கத்தால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த, 1998ல் மனைவி இவரை பிரிந்து சென்றார்.
கடந்த, 2017ல் மார்கண்டன், அசாம் அருகே லாரி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கி, இவரின் இடது கால் துண்டானது, வலது காலும் பாதிக்கப்பட்டது. மனைவி, பெற்றோரால் ஒதுக்கப்பட்ட நிலையில், திப்பம்பட்டி பஸ் ஸ்டாப், சாலையோரம் மற்றும் உறவினர் வீட்டில் தங்கி வருகிறார்.மார்கண்டனுக்கு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்கிறது. இவர், சுயதொழில் செய்யும் வகையில் பெட்டிக்கடை வைக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டியும் கோரி கடந்த, 7 ஆண்டுகளாக மனு அளித்தும் இன்னும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் அவருக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.