/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் கழிவுநீர்: 2 ஆண்டாக சிரமப்படும் மக்கள்
/
சாலையில் கழிவுநீர்: 2 ஆண்டாக சிரமப்படும் மக்கள்
ADDED : நவ 19, 2025 02:18 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட, திருவனப்பட்டி பஞ்.,ல், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள கால்வாய் வழியாக பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கால்வாயில், அடைப்பு ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு, கிராம மக்கள் ஒன்றிணைந்து தற்காலிக கால்வாய் அமைக்கும் பணியில், பைப் அமைத்து கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். பெருமாள் கோவில் எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கொட்டகுளம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையின் குறுக்கே, தற்காலிகமாக கழிவுநீர் செல்லும் கால்வாய் அமைத்த நிலையில், அதன் மூலம் வெளியேறும் கழிவுநீர் ரேஷன் கடை, சமுதாய கூடம் வழியாக கடந்து செல்கிறது.
அப்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

