/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா
/
கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா
ADDED : நவ 19, 2025 02:18 AM
ஓசூர், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின், சேலம் மண்டலம் சார்பில், ஓசூர் சிஸ்யா பள்ளி வளாகத்தில் தமிழிசை விழா நடந்தது.
சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி விழாவை துவக்கி வைத்தார். குருகுலம் பள்ளி தாளாளர் மோகனசுந்தரம், சிஸ்யா பள்ளி தாளாளர் வசந்தி தியாகராஜன், ஜே.பி.எஸ்.ஆர்., எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் சிவராமன் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் விழா துவங்கியது.
மஹன்யஸ்ரீ குழுவினரின் குரலிசை நிகழ்ச்சி நடந்தது.பாபநாசம் அசோக் ரமணி குழுவினரின் சிறப்பு தமிழிசை நிகழ்ச்சி மற்றும் டைட்டன் பள்ளி, மகரிஷி பள்ளி மாணவர்களின் தமிழிசை நிகழ்ச்சி, சிதம்பரேச நாட்டிய கலைமணி சுபாஷினி மற்றும் தனலட்சுமி சித்தார்த் ஆகியோரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. சுபலட்சுமி, சென்னை மைதிலி ஆகியோரது குரலிசை நிகழ்ச்சி மற்றும் ஓசூர் சந்தோஷ்குமார், ஆறுமுகம் குழுவினரின் திருவருட்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழிசையின் மாண்பு என்ற தலைப்பில், நாகை முகுந்தன் தலைமையில் சொற்பொழிவு நடந்தது. மாவட்ட இசைப்பள்ளி தலைமையாசிரியை திரிவேணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் சங்கரராமன் செய்திருந்தார்.

