/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4 கோடியில் சாக்கடை கால்வாய் பணி 4 மாதமாக 20 சதவீதம் கூட முடியவில்லை
/
ரூ.4 கோடியில் சாக்கடை கால்வாய் பணி 4 மாதமாக 20 சதவீதம் கூட முடியவில்லை
ரூ.4 கோடியில் சாக்கடை கால்வாய் பணி 4 மாதமாக 20 சதவீதம் கூட முடியவில்லை
ரூ.4 கோடியில் சாக்கடை கால்வாய் பணி 4 மாதமாக 20 சதவீதம் கூட முடியவில்லை
ADDED : ஏப் 24, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, சென்னை சாலையிலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து ரவுண்டானா வழியாக காந்திசாலையிலுள்ள அரசு மருத்துவமனை வரை, 4 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் துவங்கியது.
சென்னை சாலையில், முக்கிய வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர், பல்வேறு கடைகள், டூவீலர் ஷோரூம்கள், பெரிய மாரியம்மன் கோவில், அரசு டவுன் பஸ் டிப்போ ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் இச்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
இச்சாலையின் இடது பக்கம், புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த, 4 மாதங்களாக நடந்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், வியாபாரம் கடுமையாக பாதித்து கடை வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், 'சென்னை சாலையில், கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி, 4 மாதமாகிறது.
ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், 20 சதவீத கட்டுமான பணிகள் கூட முடியவில்லை. இதனால், இச்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, வியாபாரம் முற்றிலும் முடங்கி உள்ளன. எனவே, விரைவில் கால்வாயை கட்டி முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.