/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
/
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஜூலை 24, 2025 02:08 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, அரசு பள்ளி மாணவியர், 3 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், ஆங்கில ஆசிரியர் போக்சோ வில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகிலுள்ள ஒரு நடு
நிலைப்பள்ளியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன், 50. இவர், அப்பகுதி அரசு பள்ளியில் பயிலும், 8ம் வகுப்பு மாணவி மற்றும் 7ம் வகுப்பு பயிலும் இரு மாணவியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, புகார் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோர், ஆசிரியரிடம் கேட்டதற்கு, 'உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்கிறேன், வெளியில் சொல்ல வேண்டாம், எனவும், 2 லட்சம் ரூபாய் தருகிறேன்' எனவும் ஆசிரியர் பாலகிருஷ்ணன் தரப்பில் கூறியதாகவும், மாணவியரின் பெற்றோர் கல்வி அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியர் பயிலும் பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவு படி, நேற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்துாரி, வட்டார கல்வி அலுவலர் சுதா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்கள் ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மாணவியரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவியருக்கு அவர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலகிருஷ்ணனை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.
காழ்ப்புணர்ச்சியா
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பாலகிருஷ்ணன் மீது, ஆசிரியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பல்வேறு புகார்கள் தெரிவிக்கின்றனர். கடந்த, ஏப்., 7ல், வேப்பஹள்ளி, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர்
ஆறுமுகம் மற்றும் தி.மு.க., பிரமுகர்கள், கலெக்டர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர். அதில், பாலகிருஷ்ணன் கடந்த, 2008ல், கண் பார்வை குறைவு, 2 கைகள் ஊனம் என, 18 வயதிற்கு உட்பட்டோருக்கு வழங்கப்படும் சான்றிதழை, 34 வயதில் வாங்கி உள்ளார். அவர் பணியில் சேரும்போது அதாவது, 2010ல், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ சான்றிதழ் வழங்கி உள்ளார். இதை கவனிக்க தவறி உள்ளனர். அதேபோல கடந்த, 2009ல், பி.எட்., பி.ஏ., என, 2 படிப்புகளையும் முடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.
அவரது, 15 ஆண்டு, ஆசிரியர் பணிக்காலத்தில், கொரோனா காலத்தை தவிர்த்து, 13 ஆண்டுகளில், 1,700 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். மேலும், 21 மாதங்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக ஊக்க ஊதியம் பெற்று வருகிறார். அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என, புகாரளித்தனர்.
ஆசிரியர் விளக்கம்
இது குறித்து ஆசிரியர் பால
கிருஷ்ணன் கூறுகையில், “கடந்த, 2020ல், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களை, விதிமுறைகளை மீறி நியமித்ததாக, கல்வித்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமித்து, 58 லட்சம் ரூபாய், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கு மூலம் எடுத்து, ஊதியம் வழங்கப்பட்டது. இது போன்றவற்றையும், வட்டார கல்வி அலுவலர்கள் மீதும் புகாரளித்தேன். இதனால் என் மீது பலரும் காழ்ப்புணர்ச்சியில் உள்ளனர். அதன் விளைவாகவே ஆசிரியர்களின் துாண்டுதலின் படி, என் மீது புகாரளித்துள்ளனர். அவற்றிற்கு சட்ட விதிமுறைகள் படி சந்தித்து
பதிலளிப்பேன்,” என்றார்.