/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காதல் மனைவி தற்கொலையால் அதிர்ச்சி ; கையை அறுத்து கணவனும் தற்கொலை முயற்சி
/
காதல் மனைவி தற்கொலையால் அதிர்ச்சி ; கையை அறுத்து கணவனும் தற்கொலை முயற்சி
காதல் மனைவி தற்கொலையால் அதிர்ச்சி ; கையை அறுத்து கணவனும் தற்கொலை முயற்சி
காதல் மனைவி தற்கொலையால் அதிர்ச்சி ; கையை அறுத்து கணவனும் தற்கொலை முயற்சி
ADDED : மார் 24, 2025 07:10 AM
போச்சம்பள்ளி: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த, பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ், 26. இவரது மனைவி ஜனனி, 23. இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சிப்காட்டில் ஓலா நிறுவனத்தில் ஜனனி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். லோகேஷ் போச்சம்பள்ளி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி, முல்லை நகரில், வாடகை வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு விவினேஷ் என்ற, எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது.
ஜனனி, தான் பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு, ஓசூரிலுள்ள வேறு கம்பெனிக்கு சென்றால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என, லோகேஷிடம் கூறியுள்ளார். லோகேஷ் மறுத்ததால் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த லோகேஷ், அறையில் ஜனனி துாக்கிட்டு சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் பிளேடால் தன் கைகளை அறுத்து கொண்டும், பினாயிலை குடித்தும் தற்கொலைக்கு முயன்றார். போச்சம்பள்ளி போலீசார் வந்து, லோகேஷை முதலுதவி சிகிச்சைக்கு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜனனி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஜனனிக்கு திருமணமாகி, 2 ஆண்டுகளே ஆவதால், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் விசாரித்து வருகிறார்.