ADDED : நவ 14, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் பிரதீப்குமார், 26. எம்.ஜி., ரோட்டில், கீழ் தளத்தில் மளிகைக்கடையும், முதல் தளத்தில் குடும்பத்துடனும் வசிக்கிறார்; கடந்த, 11 இரவு, 10:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த, 30 வயது மதிக்கத்தக்க, 3 பேர், கல்லா பெட்டியில் இருந்த, 65,000 ரூபாயை திருடிச் சென்றனர். இக்காட்சிகள் கடை-யிலிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. பிரதீப்குமார் புகார் படி, கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, ஓசூர் டவுன் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்-றனர்.