/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடையில் திருட்டு வாலிபருக்கு 'காப்பு'
/
கடையில் திருட்டு வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 14, 2025 03:43 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து திருப்-பத்துார் செல்லும் சாலையில், கெங்கிநாய்க்கம்பட்டி பகுதியில் ஜெகதீஷ், 63, என்பவர் தினேஷ் மினி மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
ந்த, 7ல் இந்த கடையின் பின்புற-முள்ள ஷட்டரை உடைத்து, கடையில் இருந்த, 10,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் ஜெகதீஷ் புகார் அளித்தார். போலீசார் அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வடமலம்பட்டியை சேர்ந்த முருகன், 27, என்ற வாலிபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்-தது. இதையடுத்து நேற்று முருகனை, போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.