/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வு: 915 பேர் 'ஆப்சென்ட்'
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வு: 915 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 22, 2025 08:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்துத்தேர்வில், 915 பேர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், காவல் துறைக்கு, 1,352 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த, 2,408 பேருக்கு நேற்று தேர்வுகள் நடந்தன. ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை, 10:00 முதல், நண்பகல், 12:30 மணி வரை முதன்மை தேர்வும், மதியம், 3:30 முதல், மாலை, 5:10 மணி வரை தமிழ் தகுதிக்கான எழுத்துத்தேர்வும் நடந்தன. விண்ணப்பித்திருந்த, 2,408 பேரில், 915 பேர் தேர்வெழுத வரவில்லை.இதில், 1,172 ஆண்கள், 321 பெண்கள் என மொத்தம், 1,493 பேர் தேர்வு எழுதினர். கடலோர காவல்படை டி.ஐ.ஜி., மகேஷ்குமார், தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில், 450க்கும் மேற்பட்ட போலீசார், தேர்வு மைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

