/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இந்து முன்னணியினர் 10 பேர் மீது வழக்கு
/
இந்து முன்னணியினர் 10 பேர் மீது வழக்கு
ADDED : டிச 22, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முடியவில்லை எனக்கூறி வந்த, மதுரை நரிமேட்டை சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர், சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பஸ் ஸ்டாண்டில், அவரது உருவப்படத்திற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு போலீசாரிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் கூறி, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மது, 40, உட்பட, 10 பேர் மீது, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

