/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகளை மின்சாரம் தாக்காமல் இருக்க 9.3 கி.மீ., துாரத்திற்கு 'சிலிக்கான் ஸ்லீவ்'
/
யானைகளை மின்சாரம் தாக்காமல் இருக்க 9.3 கி.மீ., துாரத்திற்கு 'சிலிக்கான் ஸ்லீவ்'
யானைகளை மின்சாரம் தாக்காமல் இருக்க 9.3 கி.மீ., துாரத்திற்கு 'சிலிக்கான் ஸ்லீவ்'
யானைகளை மின்சாரம் தாக்காமல் இருக்க 9.3 கி.மீ., துாரத்திற்கு 'சிலிக்கான் ஸ்லீவ்'
ADDED : டிச 02, 2024 02:41 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், 250க்கும் மேற்பட்ட யானைகள் முகா-மிட்டுள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்ப-குதியை விட்டு வெளியேறும் போது, அவ்வழியாக செல்லும் உயர்மின் அழுத்த மின் கம்பிகளில் சிக்கி பலியாகின்றன.
கடந்த மே மாதம்,
சந்தனப்பள்ளி ஏரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானையும், பாலதொட்டனப்பள்ளி அருகே தனியார் எஸ்டேட்டில் ஒரு யானையும் மின்சாரம் தாக்கி பலியாகின. அதேபோல் கடந்த, 2020ல், கர்நாடகா எல்லையில் இரு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
இதை தடுக்க, யானைகள் அதிகமாக வெளியேறும் இடங்களில் உள்ள உயர் மின் அழுத்த மின் பாதைகளில், பாதுகாப்பு நடவடிக்-கைகள் மேற்கொள்ள, வனத்துறை சார்பில் மின்வாரியத்திடம் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பெட்டமுகி-லாளம், ஜவளகிரி, கரடிக்கல், அஞ்செட்டி, உரிகம், அர்த்தக்கல், அத்திநத்தம் போன்ற பகுதிகளில், வனப்பகுதியை ஒட்டி செல்லும், 9.3 கி.மீ., துார உயர்மின் அழுத்த மின்பாதைகளில், மின் கம்பிகள் யானைகள் மீது பட்டாலும், மின்சாரம் தாக்காமல் இருக்க, அதன் மீது, 'சிலிக்கான் ஸ்லீவ்' என்ற பாதுகாப்பை உரு-வாக்கும் பணியை, 32 லட்சம் ரூபாய் மதிப்பில், வனத்துறை-யினர் மேற்பார்வையில் கடந்த, 3 மாதங்களுக்கு முன் மின்வா-ரியம் மூலம் துவங்கப்பட்டது.
இப்பணிகளில், 8.5 கி.மீ., துாரம் பணிகள் முடிந்து விட்டன. மீத-முள்ள பணிகளை வரும், 5க்குள் முடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.