/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
/
ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
ADDED : ஏப் 07, 2024 03:24 AM
மொரப்பூர்: மொரப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மொரப்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், கல்லாவி பிரிவு ரோடில், நேற்று மதியம், 3:35 மணிக்கு, முருகன் தலைமையிலான, பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த புல்லட்டை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய வெள்ளி கொலுசுகள் இருந்தது. விசாரணையில், சேலம் மாவட்டம், தள
வாய்பட்டி அடுத்த சித்தனுாரை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், பாலீஷ் போடுவதற்கு கொலுசுகள் எடுத்து வந்ததும் தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்து, அரூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

