/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற சகோதரிகள் கைது
/
வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற சகோதரிகள் கைது
ADDED : செப் 29, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் பட்டாசு தயாரித்து
விற்ற சகோதரிகள் கைது
போச்சம்பள்ளி, செப். 29-
போச்சம்பள்ளி அடுத்த, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் சோத்தி, 50; இவர், கடந்த, 20 வருடங்களுக்கு மேலாக போச்சம்பள்ளியில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த, 2 மாதமாக வீட்டில் தன் தங்கை நசீமாவுடன் பட்டாசு தயாரித்து ரகசியமாக விற்று வந்துள்ளார். போச்சம்பள்ளி போலீசார் நேற்று அவரது வீட்டில் சோதனையிட்டபோது, 400 தோரணம் பட்டாசு, வெடிகுண்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததுடன் சோத்தி, நசீமா, 45, இருவரையும் கைது செய்தனர்.