/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணி பார்க்கிங் செய்யும் இடமாக மாறிய சாலை
/
மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணி பார்க்கிங் செய்யும் இடமாக மாறிய சாலை
மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணி பார்க்கிங் செய்யும் இடமாக மாறிய சாலை
மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணி பார்க்கிங் செய்யும் இடமாக மாறிய சாலை
ADDED : ஜூன் 21, 2025 12:55 AM
ஓசூர், ஓசூரில், சாலை விரிவாக்க பணி மந்த கதியில் நடப்பதால், தேன்கனிக்கோட்டை சாலை பார்க்கிங் செய்யும் இடமாக மாறி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளன. இதன் முன் உள்ள, தேன்கனிக்கோட்டை சாலையோரம் புதிய கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யும் பணி, சப்-கலெக்டர் அலுவலகம் முன் சிறிய ரவுண்டானா அமைக்கும் பணி ஆகியவை, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த ஜனவரியில் துவங்கியது.
சாலையை விரிவாக்கம் செய்ய, இருபுறமும் ஓரிரு அடிகள் பள்ளம் தோண்டி ஜல்லி கொட்டியுள்ளனர். ஆனால், சாலை விரிவாக்க பணியை முடிக்காமல் காலமதாமதம் செய்கின்றனர். இச்சாலையில் சப்-
கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வந்து, சாலையோரம் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். மேலும் சாலையின் அகலம் குறைந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் வந்தால் கூட, சில நேரங்களில் வழி கிடைப்பதில்லை. எனவே, பணியை தாமதமின்றி முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.