/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டம்
/
சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டம்
சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டம்
சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2025 12:49 AM
ஓசூர், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், ஓட்டு முறைகேடு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பதவியிழப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிறுவன தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இ.,கம்யூ., காங்., இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் உட்பட பல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
தமிழகத்தில், வட இந்தியர்கள் ஏராளமானோரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, 2026 சட்டசபை தேர்தலில் முறைகேடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில தலைவர் சாமி, பொருளாளர் முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், காங்., நிர்வாகி சூர்யகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.