/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூளியம் ஏரிக்கரையில் மண் அரிப்பு: கான்கிரீட் சுவர் அமைக்க ஆய்வு
/
கூளியம் ஏரிக்கரையில் மண் அரிப்பு: கான்கிரீட் சுவர் அமைக்க ஆய்வு
கூளியம் ஏரிக்கரையில் மண் அரிப்பு: கான்கிரீட் சுவர் அமைக்க ஆய்வு
கூளியம் ஏரிக்கரையில் மண் அரிப்பு: கான்கிரீட் சுவர் அமைக்க ஆய்வு
ADDED : நவ 26, 2025 01:47 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கூளியம் பஞ்., அம்மனேரி சாலை முதல் கூளியம் கொட்டாய் ரோடு வரை புதிய சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளதையும், கூளியம் ஏரிக்கு தடுப்பு சுவர்கள் கட்டும் பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “அம்மனேரி சாலை முதல் கூளியம் கொட்டாய் ரோடு வரை பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 24.65 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 180 மீ., தூரத்திற்கு, 4.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கவும், கூளியம் ஏரிக்கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கான்கிரீட் சுவர் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,” என்றார்.
கிருஷ்ணகிரி பி.டி.ஓ., சிவபிரகாசம், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஷ்குமார் உதவி பொறியாளர் ஜமுனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.