/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் இன்று கல்விக்கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
/
ஓசூரில் இன்று கல்விக்கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஓசூரில் இன்று கல்விக்கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஓசூரில் இன்று கல்விக்கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ADDED : நவ 26, 2025 01:46 AM
ஓசூர், ஓசூரில் இன்று, மாபெரும் கல்விக்கடன் முகாம் நடக்க இருப்பதாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்யவும், கல்விக்கடன் பெறும் வாய்ப்புகளை எளிதாக்கவும், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கி நிர்வாகம் சார்பில் இன்று (நவ.26) காலை, 10:00 மணி முதல், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்று, கல்விக்கடன் பெறும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வங்கிகளில் ஏற்கனவே கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, புதிதாக கல்விக்கடன் தேவைப்படுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
மாணவ, மாணவியர் கல்விக்கடன் கோரும் விண்ணப்ப படிவத்தின் நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட சான்று, வருமான சான்று, ஜாதிச்சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், கல்லுாரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விபரம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

