/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிபோதையில் தந்தை கொலை மகன் கைது
/
குடிபோதையில் தந்தை கொலை மகன் கைது
ADDED : ஆக 22, 2025 11:12 PM
கிருஷ்ணகிரி:தந்தையை அடித்து கொலை செய்த குடிபோதை மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே கீழ்பூங்குருத்தியை சேர்ந்தவர் ஊசுலியப்பன், 70; விவசாயி. இவரது மகன் கிருஷ்ணன், 35; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி தீபா, 25. அக்கா பாலம்மாள். அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மது குடித்துவிட்டு வீட்டில் கிருஷ்ணன் தகராறு செய்து வந்தார்.
கடந்த, 20ல் வழக்கம்போல் போதையில் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் மரக்கட்டையால் தந்தை, அக்கா, மனைவியை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கந்திகுப்பம் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர். சிகிச்சை பெற்று வந்த ஊசுலியப்பன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.