/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது
/
மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, பாகலுார் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் பாத்திமா, 42, சிக்கன் கடை நடத்தி வருகிறார்; இவரது மகன் மவுலா, 28, கூலித்தொழிலாளி; குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தன் தாய் பாத்திமாவிடம் கடந்த, 7 மாலை, 4:00 மணிக்கு மது வாங்க பணம் கேட்டார்.
பணம் கொடுக்க பாத்திமா மறுப்பு தெரிவித்தார். வீட்டிற்குள் புகுந்த மவுலா, அங்கிருந்த வாஷிங் மிஷின், முன்பக்க கதவு, ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். பாத்திமா புகார் படி, மவுலாவை நேற்று முன்தினம் பாகலுார் போலீசார் கைது செய்தனர்.